சட்டவிரோத நடவடிக்கை உங்கள் மீது இருக்கா? அரசு வேலையில் சேர விரும்புவோர், வாழ்நாள் தடையை சந்திக்க நேரிடும்!

Railway job aspirants found indulging in unlawful activities may face lifetime debarment from obtaining Railway job, says Railway Ministry

Update: 2022-01-26 08:57 GMT

ரயில்வே வேலையில் சேர விரும்புவோர், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், ரயில்வே வேலையை பெறுவதற்கு நிரந்தர தடையை சந்திக்க நேரிடும் என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில்வே வேலையில் சேர விரும்புபவர்கள், ரயில்வே பாதைகளில் போராட்டம் நடத்துவது, ரயில்களை மறிப்பது, ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது கவனத்துக்கு வந்துள்ளதாக ரயில்வே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற தவறான நடவடிக்கைகள், ஒழுங்கீனமானவை என்பதால், இவர்கள் ரயில்வே மற்றும் அரசு வேலைகளுக்கு பொருத்தமற்றவர்கள் என அந்த அறிக்கை கூறுகிறது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்களின் வீடியோக்கள், சிறப்பு ஏஜன்சிகள் மூலம் ஆய்வு செய்யப்படும். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடும் விண்ணப்பதாரர்கள், காவல்துறை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் மற்றும் ரயில்வே வேலை பெறுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கப்படுவர்.

ஆட்கள் தேர்வை நியாயமாகவும், வெளிப்படையாகவும் நடத்த ரயில்வே தேர்வு வாரியம் உறுதிபூண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வேலை விரும்பும் விண்ணப்பதாரர்கள், தவறாக வழிநடத்தப்படக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே நடத்தும் RRB தேர்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பீகார் மாணவர்கள், RRB NTPC தேர்வில் முறைகேடு நடந்ததாக எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. மாணவர்கள் பாட்னா மற்றும் பீகாரின் பிற நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களைச் சுற்றி திரண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ராஜேந்திர நகர் ரயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.




Tags:    

Similar News