ரயில்நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்கும் அசத்தலான திட்டம் !

Update: 2021-10-12 04:37 GMT

ரயில்நிலையங்களில்  எச்சில் துப்புவது, தூய்மையான சுகாதாரத்திற்கு வழி வகுக்காது. அதுவும் இந்த பெருந்தொற்று காலத்தில் எச்சில் துப்புவது மிகவும் கேடு விளைவிக்கும் செயல் ஆகும். இதனை தடுக்க டெல்லியில் ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கையடக்க பை மற்றும் பெட்டியை ரெயில்வே அறிமுகம் செய்துள்ளது. வடக்கு ரெயில்வே, மத்திய ரெயில்வே மற்றும் மேற்கு ரெயில்வே மண்டலங்களில் 42 ரெயில் நிலையங்களில் இந்த பைகள் வழங்கும் கடைகளும், விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன. இதற்கான ஒப்பந்தம், 'ஈசிஸ்பிட்' என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பை ரூ.5 முதல் ரூ.10 வரை விற்கப்படுகிறது. 3 வடிவங்களில் பை கிடைக்கும். ரெயில்வே வளாகத்தில் இருக்கும்போது எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இந்த பையில் துப்பிக் கொள்ளலாம். இது மறுபயன்பாடு கொண்டது. 20 தடவை வரை துப்பலாம்.

அந்த பைக்குள் ஒரு தானிய விதை இருக்கும். பையை பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி வீசினால், அது முளைத்து செடியாக வளரும். ரெயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்க இந்த முறை உதவும் என்று ரெயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

இத் திட்டம்  ரயில்நிலையங்களின் தூய்மையை உறுதிப்பதும் என்று நம்பலாம் !

இந்த திட்டம் இந்தியாவில் உள்ள அணைத்து ரயில்நிலையங்களிழும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Image : Pune Mirror

Maalaimalar

Tags:    

Similar News