ராஜஸ்தான்: சமண கோவிலில் 500 வருடம் பழமையான 30 சிலைகள் திருட்டு!

ராஜஸ்தான்: சமண கோவிலில் 500 வருடம் பழமையான 30 சிலைகள் திருட்டு!

Update: 2021-02-03 07:45 GMT

தொடர்ந்து இந்து கோவில்கள் தாக்கப்படுவதும் மற்றும் கோவிலில் சிலைகள் திருடப்படுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அதே போன்று ராஜஸ்தானில் தற்போது ஒரு திகம்பர் ஜெயின் கோவிலில் உள்ள 30 கற்களால் ஆன பழங்கால சிலைகள்,  மற்றும் 65,000 மதிப்புள்ள சில்வர் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. 

இந்த சம்பவமானது திங்கட்கிழமை அன்று நடந்துள்ளது. திருடர்கள் ஜெய்ப்பூரில் காட் கி குனி பகுதியில் உள்ள கோவிலில் புகுந்துள்ளனர். மேலும் அவர்கள் பூசாரி இருந்த அறையைப் பூட்டி அங்குள்ள பொருட்களைத் திருடிச்சென்றுள்ளனர். மேலும் காவல்துறைக்கு அளித்துள்ள புகாரில் திருடப்பட்ட சிலைகள் அனைத்தும் 500 ஆண்டுகள் பழமையானவை என்று பூசாரி கூறியுள்ளார். 

"எட்டு உலோகங்களால் செய்யப்பட்ட 30 சிலைகள் திருடப்பட்டுள்ளன. இந்த சிலைகளில் சிலவற்றை 500 ஆண்டுகள் பழமையானவை. நாங்கள் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்றோம் மற்றும் பூசாரி மற்றும் பிறரிடம் வாக்குமூலத்தைப் பெற்றோம்," என்று மூத்த காவல் அதிகாரி தெரிவித்தார். மேலும் கோவில் அலுவலகத்தில் வேலை செய்து வரும் நபர்கள் திருடர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரியும் மற்றும் ஊரில் உள்ள மற்ற சமண கோவில்களுக்குப் பாதுகாப்பது வழங்கக் கோரியும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

"இந்த சம்பவம் முன்பே திட்டமிட்ட சம்பவம் போன்று தெரிகின்றது. மேலும் அருகில் உள்ள பகுதிகளில் உள்ள CCTV கேமெராக்களை சோதனை செய்து வருகிறோம்," என்று காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார். 

Similar News