ஒருபுறம் ராகுல் யாத்திரை, மறுபுறம் அடித்துக்கொள்ளும் ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ'க்கள் - என்ன நடக்கிறது?
ராஜஸ்தானில் முதல் மந்திரி தேர்வு செய்வது சிக்கல்கள் நீடிப்பு, MLAக்கள் போர்க் கொடியை காட்டு சம்பவம்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அசோக் கெலாட் முதல் மந்திரி ஆனார். 200 உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையில் காங்கிரசுக்கு 108 உறுப்பினர்கள் உள்ளார்கள். இதற்கிடையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடக்கிறது. இதில் மேலிடம் உத்தரவுடன் ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட் போட்டியிடுகிறார். ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பின்பற்ற வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். அதன் பெயரில் அசோக் கெலாட்க்கு பதிலாக வேறு ஒருவரை முதல் மந்திரியாக நியமிக்க மேலிடம் திட்டமிட்டுள்ளது.
ஆனால் முதல் மந்திரி பதவியில் நீடிக்க அசோக் கெலாட் விரும்புகிறார். இருப்பினும் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்தும் நோக்கில் நேற்று மல்லிகார்ஜுன, அஜய் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு அனுப்பப் பட்டார்கள். ஆனால் அசோக் கெலாட்க்கு ஆதரவாக 82 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென்று போர் கொடி உயர்த்தினார்கள். அவர்கள் புறக்கணிப்பால் எம்எல்ஏ கூட்டம் நடக்கவில்லை. சபாநாயகர் இடம் தங்களது ராஜினாமா கடிதங்களை அளித்தார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு ராஜஸ்தானில் இருந்து டெல்லி திரும்பிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பார்வையாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ஒரு தரப்பு எம்எல்ஏகளுக்காக நாங்கள் நீண்ட நேரம் காத்திருந்தோம். அவர்கள் வரவில்லை. அவர்கள் தனியாக கூட்டம் நடத்தியது ஒழுங்கின செயல் என்று கண்டித்து இருக்கிறார். காங்கிரஸின் 75 வருட வரலாற்றில் தீர்மானத்தின் நிபந்தனைகளுக்கு இடம் பெற்றது இல்லை. இது ஒரு தரப்புக்கு சாதகமான செயல் நாங்கள் முடிவும் எடுக்கவில்லை சோனியா காந்தியிடம் சொல்லி இருக்கிறோம். இறுதியில் அவர் தான் முடிவு எடுப்பார் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: Nakkheeran News