ராஜஸ்தானில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.1 பதிவு!

ராஜஸ்தான் பிகானேரின் வடமேற்கே நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

Update: 2022-08-22 08:52 GMT

திங்கட்கிழமை அதிகாலை 2:01 மணிக்கு நிலநடுக்கத்தின் சரியான நேரம் நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 10 கி.மீ இருந்ததாக தற்போது பதிவாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று அதிகாலை பிகானேரின் வடமேற்கில் ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 2.01 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை. முன்னதாக சனிக்கிழமையன்று, லக்னோவின் வடக்கு-வடகிழக்கில் ரிக்டர் அளவுகோலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.


சனிக்கிழமை அதிகாலை 1.12 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் ஆழம் பூமிக்கு அடியில் 82 கி.மீ அளவு பதிவாகி உள்ளது. இதுவே உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோ மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான வண்ணம் வட இந்தியாவில் இத்தகைய நில நடுக்கங்கள் ஏற்பட தொடர்ச்சியான மர்மமாகவே இருந்து வருகிறது.


ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் வெள்ளிக்கிழமை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. மதியம் 12.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.1 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரின் ஹான்லி கிராமத்தின் தென்-தென்மேற்கில் தாக்கியதாக NCS தெரிவித்துள்ளது. 

Input & Image courtesy:IndiaTV News

Tags:    

Similar News