இரண்டு சிறுமிகள் காணாமல் போனதில் தலிப் மற்றும் அக்ரம் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு!

இரண்டு சிறுமிகள் காணாமல் போனதில் தலிப் மற்றும் அக்ரம் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டு!

Update: 2020-12-23 17:09 GMT

நாட்டில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளைக்  குறிவைத்து அவர்களிடம் ஆசையாகப் பேசி தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்களை தங்கள் சமூகத்திற்கு மாற்றிக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்வது தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுவே 'லவ் ஜிகாத்' குற்றமாகக் கருதப்படுகின்றது. இதனைத் தடுப்பதற்கு பல்வேறு மாநிலங்களில் சட்டங்கள் சட்டங்கள் இயற்றப்பட்டது. ஆனால் அது போன்ற குற்றங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. நாளுக்கு நாள் அதன் கீழ் வழக்குகளும் பதிவாகி வருகின்றது. 

தற்போது அதே போன்று லவ் ஜிகாத் வழக்கு இரண்டு ராஜஸ்தான் மாநிலம் யமுனா நகரில் வெளிவந்துள்ளது. யமுனா நகர் காவல்துறை இரண்டு முஸ்லீம் இளைஞர்கள் தாலிப் மற்றும் அக்ரம் மீது மைனர் சிறுமிகளைக் கடத்தியதற்காக இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளது. சிறுமிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் காணாமல் போனதை அடுத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். காவல்துறை இரண்டு வழக்கையும் பதிவு செய்துள்ளது. 

முதல் வழக்கில், 15 வயது சிறுமியின் பெற்றோர்கள் தாங்கள் சந்தைக்குச் சென்று வந்த போது சிறுமி வீட்டில் இல்லை என்று பதிவு செய்துள்ளனர். அவர்கள் அங்குள்ள தாலிப் இளைஞரும் காணாமல் போனதைக் குறிப்பிட்டனர். அவன் தனது மகளைக் கடத்தி சென்றிருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். தாலிப் மேல் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. அவர்கள் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வருவதாக ஹமிதா காவல்துறை அதிகாரி மெம் சிங் தெரிவித்தார். 

அடுத்த வழக்கில், 16 வயது சிறுமி கல்லூரிக்குச் சென்ற பிறகு காணாமல் போனதாக அவளது பெற்றோர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரது தந்தை அளித்த புகாரில் கல்லூரிக்குச் சென்ற பிறகு அவர் வீடு திரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

அவரது தந்தை கல்லூரியில் விசாரித்த போது திங்கட்கிழமை அவர் கல்லூரிக்கு வர வில்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருமணத்திற்காக அவளை அக்ரம் என்ற முஸ்லீம் இளைஞன் கடத்தி சென்றிருப்பதாக சந்தேகிப்பதாக குடும்பத்தினர் கூறினர். மேலும் இந்தியத் தண்டனை சட்டம் 363 மற்றும் 366A வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Similar News