தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் பற்றிய சில கருத்துக்களை பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கூறியிருந்தார். இதற்கு இஸ்லாமியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ஆங்காங்கே நுபுர் சர்மாவுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர்.
இதற்கிடையில், பா.ஜ.க. மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்துக்களும் நுபுர் சர்மாவுக்கு ஆதரவான கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதே போன்று ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகின்ற தையல்காரர் கன்னையா டெலி 40, என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.
இது குறித்து அவருக்கு இஸ்லாமியர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் கன்னையா காவல் நிலையத்தில் புகாராகவும் அளித்திருந்தார்.
இந்நிலையில், 2 பேர் பயங்கர ஆயுதங்களுடன் கன்னையா டெலி கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினர். அவர்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களில் அவரது தலையை அறுத்து துண்டித்தனர். இதில் அவரது உயிர் பிரிந்தது. கொலையாளிகள் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டனர். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் காட்டூத்தீ போன்று பரவியது. ஆங்காங்கே இந்துக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
உடனடியாக கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். மேலும் இந்த படுகொலைக்கு ராஜஸ்தான் முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். உதய்பூர் மாவட்டத்தில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். படுகொலை செய்தவர்கள் ராஜ்சமந்த் மாவட்டம், பீம் பதியில் வைத்து போலீசார் கைது செய்திருப்பதாக கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: Daily Thanthi