கொரோனா அச்சுறுத்தல்: ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைப்பு.. மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு.!

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதல் இரண்டு கட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது.

Update: 2021-05-05 03:47 GMT

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனிடையே மத்திய அரசால் நடத்தப்படும் ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் நாடு முழுவதும் 4 கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் முதல் இரண்டு கட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டது. இதனிடையே தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பால் எஞ்சிய இரு கட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேர்வு குறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: மே 24 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவிருந்த ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Similar News