சோனியா காந்தியின் உதவியாளர் மீது பாலியல் வன்புணர்வு வழக்கு - வேலை தேடி வந்த பெண்ணையும் விட்டு வைக்கவில்லை!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனி செயலாளர் பிபி மாதவன் மீது டெல்லியில் கற்பழிப்பு மற்றும் கிரிமினல் மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தம் நகர் காவல் நிலையத்தில் 26 வயதான தலித் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
ஜூன் 25 அன்று உத்தம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 376 (கற்பழிப்பு) மற்றும் 506 (கிரிமினல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று துவாரகா காவல் துணை ஆணையர் எம் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
அந்த புகாரின்படி, திருமணம் செய்துகொள்வதாகவும், வேலை தருவதாக கூறி மாதவன் பெண்ணை பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் 2020 இல் இறந்தவர். அவர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் கட்சி விளம்பரங்களை ஒட்டும் பணி செய்து வந்தார்.
பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு, இந்த விஷயத்தை தெரிவித்தால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் மிரட்டியதாக போலீஸ் அதிகாரி கூறினார்.
Input From: News 18