சாதாரன போன் மூலமாகவும் பணம் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கியின் அடுத்த நகர்வு!
நாடு முழுவதும் சாதாரன போன் (கீபேட் போன்) உபயோகிக்கும் 40 கோடி நபர்களால் இனி பணப் பரிவர்த்தனை எளிதாக செய்ய முடியும். இதற்கான புதிய வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்துகிறது. இத்திட்டத்தால் ஒரு பில்லியன் சில்லறை பணப் பரிவர்த்தனைகளை கூடுதலாக செயல்படுத்த முடியும்.
யுபிஐ என்று சுருக்கமாக சொல்லப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலமாக பணம் செலுத்தும் முறை தற்போது நாடு முழுவதும் பிரபலமானவை ஆகும். அதாவது ஒரு ஸ்மார்ட் போன் மற்றும் மொபைல் எண்ணுடன் இணைந்த வங்கிக் கணக்கும் வைத்திருக்கும் ஒருவர் யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யலாம். அதே நேரத்தில் இந்தியாவில் கீபேட் கொண்ட சாதாரன மாடல் போன்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40 கோடியாக இருக்கிறது. அது போன்றவர்களின் நிலைமை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் புதிய வசதியான யுபிஐ வசதியை அறிமுகம் செய்துள்ளார்.
அதற்கான தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே கீ பேட் போன் வைத்திருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் பயன்படுகின்ற வகையில் 123 பே, யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் மூலமாக 40 கோடி நபர்கள் பணப்பரிமாற்றத்தை செய்யலாம் எனக் கூறியுள்ளார். நமது இந்திய ரிசர்வ் வங்கி தற்போது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது எனவும் கூறலாம்.
Source: Vikatan
Image Courtesy: Hindustan Times