தமிழகத்துக்கு ரூ 4,813 கோடி வெளிப்புற சந்தைகளில் இருந்து திரட்ட அனுமதி! வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தம்!

தமிழகத்துக்கு ரூ 4,813 கோடி வெளிப்புற சந்தைகளில் இருந்து திரட்ட அனுமதி! வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தம்!

Update: 2021-02-07 07:49 GMT

அசாம், ஹரியானா, ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்கள், மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை பரிந்துரைத்த வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை சிறப்பாக செயல்படுத்தியுள்ளன.

இதைத் தொடர்ந்து, ரூ 5,034 கோடி நிதியை வெளிப்புற சந்தைகளில் இருந்து திரட்டிக் கொள்வதற்கான தகுதியை இந்த நான்கு மாநிலங்கள் பெற்றுள்ளன. வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்களை இது வரை செயல்படுத்தியுள்ள மாநிலங்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த சீர்திருத்தங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளன.

இதன் மூலம், ரூ 28,183 கோடி கூடுதல் கடன் அனுமதி இந்த 12 மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ 4,813-க்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது வரை, பரிந்துரைத்த நான்கில் ஒரு சீர்திருத்தத்தையாவது 17 மாநிலங்கள் செயல்படுத்தியுள்ளன. இதில், 12 மாநிலங்கள் ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை சீர்திருத்தத்தையும், 12 மாநிலங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் சீர்திருத்தங்களையும், ஐந்து மாநிலங்கள் உள்ளாட்சி அமைப்புகள் சீர்திருத்தங்களையும், இரண்டு மாநிலங்கள் மின்சாரத் துறை சீர்திருத்தங்களையும் மேற்கொண்டுள்ளன.

இதன் மூலம், அம்மாநிலங்களுக்கு ரூ. 74,773 கோடி கூடுதல் கடன் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Sl.No.

State

Amount (Rs in crore)

1.

Andhra Pradesh

2,525

2.

Assam

934

3.

Haryana

2,146

4.

Himachal Pradesh

438

5.

Karnataka

4,509

6.

Kerala

2,261

7.

Madhya Pradesh

2,373

8.

Odisha

1,429

9.

Punjab

1,516

10.

Rajasthan

2,731

11.

Tamil Nadu

4,813

12.

Telangana

2,508

           

Source: 12 States have implemented ease of doing business reforms

Similar News