மதம் மாறும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழக்க வேண்டுமா? மத்திய அரசின் பதில் என்ன?
மதம் மாறும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமா? என்ற பதிலை மத்திய அரசு அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் மதம் மாறும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு சலுகை நீடிக்கக் கோரும் மனுவிற்கு மத்திய அரசு மூன்று வார காலங்களுக்குள் பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று நீதிபதி சஞ்சய் கிஷான் கவுல் மற்றும் விக்ராந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் இந்த ஒரு மனுவானது விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள் மதம் மாறிய எஸ்சி/எஸ்டி சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு சலுகைகள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று மனுதாரர் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். மேலும் இந்த வழக்கை அக்டோபர் மாதம் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
மேலும் இந்த வழக்கில் உச்சநீதி மற்றும் மதம் மாறிய தலித்துகள் சலுகைகள் மீண்டும் தொடருமா என்பது குறித்து தன்னுடைய முடிவை அறிக்கையாக மூன்று வார காலங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது. 2004 ஆம் ஆண்டு பொது நல வழக்கு அமைப்பு சாரா பிரிவினர் தாக்கல் செய்த இந்த மனுவில் இந்துக்கள், பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகியோர் மட்டுமே பட்டியல் இனச் சாதியினராக கருதப்படுவார்கள் என்று திருத்தப்பட்ட 1950 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு ஆணையை அரசியலமைப்பிற்கு முரணானது என்று கூறினார். இந்த அடிப்படை மற்றும் தீண்டாமையை கடைப்பிடிக்கப்படுவதை காட்டுவதாகும் என பொதுநல பொதுநல வழக்கின் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறினார்.
மேலும் மற்ற மதங்களில் உள்ள தலித்துக்கள் இந்து மதத்தில் உள்ள அதை ஒடுக்கு முறைக்கு ஆளாக படுக்கிறார்கள் என்றும், கிறிஸ்துவமும், இஸ்லாமும் ஜாதி அமைப்போ அல்லது தீண்டாமையோ அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் கலாச்சார எதார்த்தம் வேறுபட்டது என்று தன்னுடைய அறிக்கையில் அவர் தெரிவித்து இருந்தார். இந்திய சமூகத்தில் ஒரு அங்கமாக தொடர்வதால் பட்டியலின மக்கள் சாதி மற்றும் தீண்டாமை ஆகிய ஒடுக்குமுறைக்கு ஆளாக படுகிறார்கள். இந்த அச்சத்தை போக்க அந்தந்த சமூகங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் அவர் கூறியிருந்தார்.
Input & Image courtesy: Zee News