புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடு? மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்.!

Update: 2020-12-30 14:00 GMT

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் நாளை இரவு முதல் புத்தாண்டு கொண்டாடப்படவிருக்கிறது. வழக்கமாக 31ம் தேதியன்று இரவு கடற்கரை, தேவாலயங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் கூடி கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்பார்கள்.

இந்த முறை கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்களில் இரவு நேர கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்திலும், புத்தாண்டு அன்று நள்ளிரவில் கடற்கரை கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதத்தின் வாயிலாக மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அந்த கடிதத்தில் சூழலை பொறுத்து இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த முயலுங்கள் என்றும் இன்றும், நாளையும் மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 1ம் தேதி) ஆகிய நாட்களில் சூழலைப் பொருத்து கட்டுப்பாடு விதிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News