அடங்கமறுத்த பாகிஸ்தானுடன் அக்ரிமெண்ட் போட்டு, சீக்கியர்களின் நம்பிக்கையை காத்த மத்திய அரசு - இதுவரை நடந்திராத வரலாற்று சிறப்புமிக்க சம்பவம்!

ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முடிவு

Update: 2021-11-18 03:10 GMT

ஸ்ரீ கர்தாபூர் சாஹிப் கோடிக்கணக்கான இந்தியர்களின் பக்தி தலமாகும். தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு, ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் நேற்று (நவம்பர் 17) முதல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதல் இந்த வழித்தடத்தில் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கான மத்திய அரசாங்கத்தின் முடிவு சீக்கிய சமூகத்தின் மீதான அதன் அன்பை காட்டுகிறது. அரசின் இந்த முடிவால் ஏராளமான சீக்கிய யாத்ரீகர்கள் பயனடைவார்கள்.

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா, சரியான நேரத்தில் இந்த வழித்தடத்தில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினார்.

ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தின் வழியாக யாத்திரை செல்வதற்கு, தற்போதுள்ள நடைமுறைகள் மற்றும் கோவிட் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தேரா பாபா நானக்கில் உள்ள சர்வதேச எல்லையான ஜீரோ பாயிண்டில் உள்ள ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து 2019ஆம்ஆண்டு  அக்டோபர் 24,அன்று பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் ஒன்றில் இந்தியா கையெழுத்திட்டது.

வரலாற்று சிறப்புமிக்க முடிவாக, இந்தியாவில் இருந்து வரும் யாத்ரீகர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப் கர்தார்பூரை ஆண்டு முழுவதும் எளிதான முறையில் பார்வையிட வசதியாக, தேரா பாபா நானக்கிலிருந்து சர்வதேச எல்லை வரையிலான ஸ்ரீ கர்தார்பூர் சாஹிப் வழித்தடத்தை கட்டுவதற்கும் மேம்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.





Similar News