கூட்டு சேர்ந்து மணல் கடத்திய இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி, தி.மு.க அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ - வெட்ட வெளிச்சமான சட்ட விரோத காரியம்!

Update: 2022-05-18 06:27 GMT

விருதுநகர் மாவட்டம் சேத்துாரில் மணல் பதுக்கப்படுவதாக புகார் எழுந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் நகர செயலாளர் ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவரிடம் இருந்து ரூ.18 லட்சம் மதிப்புள்ள மணல் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவதில் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனுக்கு தொடர்பிருப்பதாக கூறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரத்தில் தி.மு.க.,வினர் தலையீட்டினால் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்பாட்டம் செய்தனர்.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் லிங்கம், ராஜாவுக்கு சொந்தமான இடத்தை சீல் வைத்த விவகாரத்தில் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியனுக்கு நேரடியாக தொடர்பு உள்ளது. அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரனுக்கு மறைமுகமாக தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கிறோம் என்றார். 

மேலும் இங்கு நடக்கும் மணல் திருட்டில் எம்.எல்.ஏ.,வுக்கு முக்கிய பங்கு உள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிக்கு நடந்த அவலத்தை, எம்.எல்.ஏ., இதுவரை கேட்கவில்லை எனக் கூறினார். 

Inputs From: Dinamalar 


Similar News