அரசு பேருந்தில் சிக்கிய ரூ.20 லட்சம் ஹவாலா பணம்.. ஒருவர் கைது.!

அரசு பேருந்தில் சிக்கிய ரூ.20 லட்சம் ஹவாலா பணம்.. ஒருவர் கைது.!

Update: 2020-12-15 11:59 GMT

தமிழக, கேரள எல்லையான அமரவிளை பகுதியில் கேரள மதுவிலக்கு போலீசார் வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அந்த வழியே வந்த அரசு பேருந்து ஒன்றை சோதனை செய்ததாக கூறப்படுகிறது.

பேருந்தில் இருந்து அனைவரிடமும் சோதனை நடந்த நிலையில், சந்தேகபடும்படி ஒருவர் இருந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் கட்டுக் கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.20 லட்சம் பணம் இருந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சூர் மாவட்டம் சாலக்குடியை சேர்ந்த ராஜீவ் 49, என்பது தெரிய வந்துள்ளது.

அதோடு, பணத்திற்கான எந்த ஆவணமும் அவரிடம் இல்லாததால் அது ஹவாலா பணம் என்பதும் கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு எடுத்துச் செல்வதும் அம்பலமாகியுள்ளது. 

இதனையடுத்து ராஜீவை கைது செய்த போலீசார், அந்த பணத்தை யாரிடம் கொடுக்க சென்றார்? ராஜீவிடம் பணத்தை கொடுத்தது யார்? என்பன பற்றி தீவிரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Similar News