9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2,000 பணம்.. பிரதமர் துவக்கி வைக்கிறார்.!

9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.2,000 பணம்.. பிரதமர் துவக்கி வைக்கிறார்.!

Update: 2020-12-25 07:28 GMT

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (பி.எம் கிசான்) திட்டத்தின்கீழ், சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று டெல்லியில் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், மோடி ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம், ஒரே நேரத்தில் 9 கோடிக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி, பரிமாற்றம் செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியின்போது 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடுவார். அப்போது பி.எம்.கிசான் திட்டம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு புதிய முயற்சிகள் தொடர்பான தங்கள் அனுபவங்களை விவசாயிகள் பகிர்ந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணம் உதவிகரமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதற்காக நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

Similar News