கட்டுப்பாடின்றி இருக்கும் ஓ.டி.டி. தளங்களால் குழந்தைகளுக்கு ஆபத்து: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ரெஷிம் பாக் மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்றார்.

Update: 2021-10-15 08:41 GMT

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ரெஷிம் பாக் மைதானத்தில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்றார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: ஜம்மு காஷ்மீரில் பயத்தை ஏற்படுத்துவதற்காக பயங்கரவாதிகள் குறி வைத்து வன்முறையில் ஈடுபடுகின்றனர். எல்லையில் உள்ள ராணுவத்தை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து நேரங்களிலும் எச்சரிக்கையாக இருந்து நமது எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

மேலும், நாட்டில் ஓ.டி.டி. தளங்களில் காட்டப்படும் உள்ளடகத்திற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. இது நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். தற்போது கொரோனா தொற்றுக்கு பின்னர் ஒவ்வொரு குழந்தையின் கையிலும் செல்போன் உள்ளது. செல்போனில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பது கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே ஓ.டி.டி. தளங்கள் மற்றும் செல்போனில் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Source: Maalaimalar

Image Courtesy: India Today


Tags:    

Similar News