RSS பிரமுகரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர்!

RSS Worker Hacked To Death In Front Of His Wife By SDPI Members In Kerala's Palakkad District;

Update: 2021-11-15 15:08 GMT
RSS பிரமுகரை நடுரோட்டில் வெட்டிக்கொன்ற,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  அமைப்பினர்!

திங்கள்கிழமை காலை கேரள மாநிலத்தில் உள்ள மாம்பரம் என்ற இடத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (RSS) பிரமுகர், இஸ்லாமிய அமைப்பான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவான சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) அமைப்பை சேர்ந்தவர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த 27 வயதுடைய சஞ்சித் என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகர் SDPI குண்டர்களால் தாக்கப்பட்டார். உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தையடுத்து சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

எலப்புள்ளியைச் சேர்ந்த சஞ்சித்தை ஒரு வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற மர்மநபர்கள் அவரது இருசக்கர வாகனத்தை மோதியதாகவும், கீழே விழுந்தபோது அவரது மனைவி கண்முன்னே அவரை வெட்டிக் கொன்றதாகவும் பா.ஜ.க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஆர்எஸ்எஸ் பிரமுகரின் கொலைக்கு கண்டனம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் கே சுரேந்திரன், இது திட்டமிட்ட கொலை என்றும், மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில் காவல்துறை மற்றும் மாநில அரசின் தோல்வியே காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.



Tags:    

Similar News