இனி 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை செயல்படும்.. ரிசர்வ் வங்கி.!

இனி 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவை செயல்படும்.. ரிசர்வ் வங்கி.!

Update: 2020-12-11 16:54 GMT

வங்கி கணக்குகளிலிருந்து பெரிய தொகைகளை அனுப்ப பயன்படுத்தப்படும் ஆர்டிஜிஎஸ் சேவை, வரும் 14-ம் தேதி முதல் 24 மணி நேரமும் செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

நெப்ட் சேவையில் ஒரு வாடிக்கையாளர் அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பணம் அனுப்ப முடியும். அதற்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், ஆர்டிஜிஎஸ் சேவையைத்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்போதைய நடைமுறையில், வங்கி வேலை நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த சேவையை பயன்படுத்த முடியும் சூழல் இருந்தது.

வருகின்ற 14ம் தேதி முதல் 24 மணி நேரமும் இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, நாள் ஒன்றிற்கு இந்தியாவில், ஆர்டிஜிஎஸ் மூலம் 4 லட்சத்து 17 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பணப் பரிமாற்றம் நடைபெறுகிறது. இது இனி வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிற காரணத்தால் பொதுமக்களின் வேலை நேரம் மிகவும் குறைக்கப்படுகிறது என்று மத்திய அரசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 

Similar News