எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்திய கலாச்சாரத்தின் உருவமாகத் திகழ்ந்தார் - வெங்கையா நாயுடு புகழாரம்!

Update: 2022-06-13 00:35 GMT

தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை பற்றிய புத்தகம் மற்றும் ஆவணப்படங்களை குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அதனை நூலின் முதல் பிரதியைப் நடிகர் கமல்ஹாசன் வாங்கிக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வெங்கையா நாயுடு கூறியதாவது: எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தியாவின் மாண்புகள் மற்றும் கலாச்சாரத்தின் உருவமாக திகழ்ந்து வந்தார். அவர் இளைய தலைமுறைக்கு உந்து சக்தியாக இருந்தார். எனவே இந்திய கலாச்சாரத்தையும் பழக்க வழக்கங்களையும் எதிர்காலத் தலைமுறைகளுடன் இணைப்பதை உறுதி செய்வதும், வழிகாட்டுவதும்தான் அவருக்கும் நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Maalaimalar

Image Courtesy: Twitter


Tags:    

Similar News