சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு சீசன் மற்றும் மண்டல பூஜைகள் உள்ளிட்ட நாட்களை தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தில் முதல் 5 நாட்களுக்கும், விஷூ, ஓணம் உள்ளிட்ட பண்டிகையின் போது நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
அந்த வகையில் மாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று (பிப்ரவரி 12) மாலை 5.30 மணியளவில் திறக்கப்படுகிறது. மற்ற சிறப்பு பூஜைகள் இன்றைய தினத்தில் நடைபெறாது. அதே போன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தேவஸ்தானம் கூறியுள்ளது. அதே போன்று நாளை (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படும். நாளை முதல் 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த நாட்களில் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உச்ச பூஜை, புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பூஜை வழிபாடுகள் நடைபெறும்.
Source,Image Courtesy: Maalaimalar