சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அங்கிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.

Update: 2021-11-16 02:17 GMT

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு, வருடம்தோறும் கார்த்திகை மாதம் 1ம் தேதி முதல் 60 நாட்களாக சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலையில் தரிசனம் செய்வார்கள். இதனிடையில் இந்த ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கோயில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்தனர். இதன் பின்னர் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு அங்கிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கினார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 16) முதல் புதிய மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜை மற்றும் வழிபாடுகளை தலைமை ஏற்று நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.மேலும், கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் தரிசனத்தின்போது அனுமதிக்கப்படுவார்கள். அது மட்டுமின்ற பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News