மகரவிளக்கு பூஜைக்காக ஐய்யப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது!
மகர விளக்கு பூஜைக்காக கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
மகர விளக்கு பூஜைக்காக கேரளாவில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.
கேரளாவில் கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தி வந்த நிலையில், தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்த வந்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே ஐய்யப்பன் கோயிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். அது போன்று செல்பவர்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மண்டல பூஜைக்காக நவம்பர் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் பூஜைக்குப் பின்னர் கடந்த 26ம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது. கட்டுப்பாடுகளுடன் தினமும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை நடை திறக்கப்படுகிறது. ஐய்யப்பன் கோயிலில் முக்கிய விழாவாக கருதப்படுவது மகரவிளக்கு பூஜை. எனவே வருகின்ற ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.
Source: Puthiyathalaimurai
Image Courtesy:India.com