புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு சொந்தக்காரரா நீங்கள்... வந்து விட்டது பிரதமரின் சாகர்மாலா திட்டம்... .
மோடி அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பதவியேற்றதில் இருந்து ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இளைய தலைமுறையினர் தங்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காக புதுப்புது ஸ்டார்ட் அப்களை உருவாக்கி வருகிறார்கள். அவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சாகர் மாலா புதுமை கண்டுபிடிப்புகளின் கீழ் பல்வேறு ஸ்டார்ட் ஆப்புகள் புதிய அங்கீகாரம் பெற்று இருக்கிறது.
கர்மாலா புதுமைக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப் வரைவுக்கொள்கை தொடர்புடையவர்களின் ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது.bஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் மூலம் நாடு வளர்ச்சியடைகிறது. வலிமையான புதுமைக்கண்டுபிடிப்புகள் சூழலைக் கட்டமைக்க சாகர்மாலா புதுமைக்கண்டுபிடிப்புகள் மற்றும் ஸ்டார்ட்-அப் வரைவுக்கொள்கையை மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியடைந்து வரும் கடல்சார் துறையின் எதிர்காலத்திற்காக ஸ்டார்ட்-அப் மற்றும் இதர நிறுவனங்களை தோற்றுவிக்கும் வகையில் இந்த வரைவுக்கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வளத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், நாட்டில் ஸ்டார்ட்-அப் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளை வலிமையான சூழலுக்கேற்ற வகையில் மாற்றியமைக்க தமது அமைச்சகம் சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறினார்.
Input & Image courtesy: News