விவசாயிகள் போராட்ட வன்முறையில் 100 பேரைக் காணவில்லை! திடுக்கிட வைக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா!

விவசாயிகள் போராட்ட வன்முறையில் 100 பேரைக் காணவில்லை! திடுக்கிட வைக்கும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா!

Update: 2021-02-02 06:30 GMT

டெல்லி எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாதங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 40 உழவர் சங்கங்களின் குடை அமைப்பான, "சம்யுக்தா கிசான் மோர்ச்சா" குடியரசு தினத்தன்று டிராக்டர் அணிவகுப்பு வன்முறையில் இருந்து 100 க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை என்று கூறியது.

விவசாயிகள் அமைப்பு இந்த விவகாரம் குறித்து ஆறு பேர் கொண்ட குழுவையும் அமைத்து, காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை 8198022033 என்ற தொலைபேசி எண்ணில் பகிருமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது.

ஒரு அறிக்கையில், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு  காணாமல் போனவர்கள் குறித்த தரவுகளை சேகரித்து முறையான நடவடிக்கை எடுக்க  அதிகாரிகளிடம் வலியுறுத்தியது.

சம்பவத்தின் பின்னணி:

தேசிய தலைநகரில் ஜனவரி 26 ம் தேதி மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு வன்முறையாக மாறியது, ஏராளமான எதிர்ப்பாளர்கள் போலீசாருடன் மோதிக் கொண்டு, செங்கோட்டைக்குள் நுழைந்து, அவர்களுடைய கொடிகளை கோபுரங்களில் ஏற்றினர்.

இந்த வன்முறையில், 300 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தில்லி காவல்துறை 84 பேரை கைது செய்து 38 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

ஜனவரி 26 அன்று குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் தேசியக் கொடியை அவமதித்ததைக் கண்டு நாடு வருத்தமடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தனது வானொலி நிகழ்ச்சியான மன் கி பாத் மூலம் உரையாற்றினார்.

இந்த நிலையில் டெல்லியின் மூன்று எல்லைப் புள்ளிகளான சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி ஆகிய இடங்களில் இணைய சேவைகளை நிறுத்தியதை விவசாயிகள் அமைப்பு கண்டித்துள்ளது

Similar News