போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்.. மகாராஷ்டிராவில் நடந்த கொடுமை.!

போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர்.. மகாராஷ்டிராவில் நடந்த கொடுமை.!

Update: 2021-02-02 16:51 GMT

நாடு முழுவதும் கடந்த 31ம் தேதி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதே போன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் போலியோ சொட்டு மருந்துக்கு பதில் சானிடைசர் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், யுவத்மால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், 5 வயதுக்கும் குறைவான 12 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அப்போது சொட்டு மருந்துக்கு பதிலாக சானிடைசரை செவிலியர்கள் கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனிடையே சொட்டு மருந்து விடப்பட்டு வீட்டுக்கு சென்ற குழந்தைக்கு வாந்தியும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மருத்துவமனையில் சென்று பரிசோதனை செய்ததில் குழந்தைக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சானிடைசர் கொடுக்கப்பட்ட 12 குழந்தைகளையும் கண்டறிந்து மருத்துவமனையில் சுகாதார பணியாளர்கள் அனுமதித்துள்ளனர்.

தொடர்ந்து 12 குழந்தைகளுக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தவறை செய்த செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மீது அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Similar News