சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மைக் குழு சட்டத்தைத் திரும்பப் பெற்றது உத்ரகாண்ட் அரசு !
உத்தரகாண்ட் மாநிலத்தில் சர்ச்சைக்குரிய சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மைக்குழு சட்டத்தைத் திரும்பப் பெறப் போவதாக ஆளும் பா.ஜ.க அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை அன்று உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தம்மி தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பை அறிவித்தார். ட்விட்டரில் அவர் கூறியதாவது: மக்களின் விருப்பம், நம்பிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த அரசாங்கம் இச் சட்டத்தை சட்டத்தை திரும்பப் பெற முடிவெடுத்துள்ளது. சமீப காலங்களில் இந்த அரசு பல சமூக இயக்கங்கள், அர்ச்சகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் என பல தரப்பிடமும் இச்சட்டம் பற்றி விவாதித்தோம். தற்பொழுது இச்சட்டம் திரும்பப் பெறப்படுகிறது.
சார் தாம் தேவஸ்தானம் மேலாண்மை சட்டம் என்றால் என்ன?
இச்சட்டம் 2019இல் உத்தரகாண்ட் மாநில முதல்வராக த்ரிவேந்திர சிங் ராவத் இருந்த பொழுது இயற்றப்பட்டது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி மற்றும் முக்கிய 49 கோவில்களின் நிர்வாகத்தை இந்த மேலாண்மைக் குழு விடம் ஒப்படைப்பதே இச் சட்டத்தின் நோக்கமாகும்.
இச் சட்டத்தை அமலுக்குக் கொண்டு வந்தது முதலே உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இந்துக்கள் மத்தியிலும், கோயில்களை நிர்வகிக்கும் நிர்வாகிகள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.
இந்நிலையில் எதிர்வரும் மாநில தேர்தலை கருத்தில் கொண்டு, மாநில அரசு இச்சட்டத்தை திரும்பப் பெற்றுள்ளது.
Image : HerZindagi
Image : India Legal