இந்திய நெசவாளர்களை ஆதரிக்கும் புடவை திருவிழா: பிரம்மாண்டமான துவக்கம்!

இந்தியாவின் 75 வகை கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் புடவைத் திருவிழாவின் தொடங்குகிறது.

Update: 2023-01-04 03:18 GMT

இந்தியாவின் 75 வகை கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் புடவைத் திருவிழாவின் இரண்டாவது கட்டமான பாரம்பரிய விழா, நாளை முதல் 17ஆம் தேதி வரை புதுதில்லி ஜன்பத்தில் உள்ள ஹேண்ட்லூம் ஹாட்டில் தொடங்குகிறது. மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள திருவிழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். இரண்டாம் கட்டத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 90 பங்கேற்பாளர்கள், டை அண்ட் டை, சிக்கன் எம்பிராய்டரி புடவைகள், ஹேண்ட் பிளாக் புடவைகள், கலம்காரி பிரிண்டட் புடவைகள், அஜ்ரக், காந்தா, புல்காரி போன்ற புகழ்பெற்ற கைத்தறி புடவைகள் உள்ளிட்ட பல வகை புடவைகளும் இதில் கிடைக்கும்.


இந்தியாவின் 75 வகையான கைத்தறிப் புடவைகளைக் கொண்டாடும் முதல் கட்ட விழா 2022 டிசம்பர் 16 அன்று தொடங்கி 30 அன்று நிறைவடைந்தது. இந்த நிகழ்வை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்தார். நமது கைத்தறி நெசவாளர்களுக்கு ஆதரவாக #MySariMyPride என்ற பொதுவான ஹேஷ்டேக்கின் கீழ் ஒரு சமூக ஊடகப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை ஒட்டி, 75 கைத்தறி நெசவாளர்களால் கைத்தறிப் புடவைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும்.


இந்த விழாவில் தமிழகத்தின் முன்னணி புடவைகள் காஞ்சிபுரம் பட்டுப் புடவை, ஆரணி பட்டுப் புடவைகள், திருபுவனம் பட்டுப் புடவைகள், விளந்தை காட்டன் புடவை, மதுரைப் புடவை, பரமக்குடி காட்டன் புடவை, அருப்புக்கோட்டை காட்டன் புடவை, திண்டுக்கல் காட்டன் புடவை, கோயம்புத்தூர் காட்டன் புடவை, சேலம் பட்டுப் புடவை மற்றும் கோவை பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் புடவைகள் இடம்பெறும்.

Input & Image courtesy: PIB

Tags:    

Similar News