இந்தியப் பொருளாதாரத்தைப் பாராட்டிய சவூதி அரேபியா தலைவர்!

இந்தியப் பொருளாதாரத்தைப் பாராட்டிய சவூதி அரேபியா தலைவர்!

Update: 2020-12-21 17:09 GMT

உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, இந்தியாவில் தனது முதலீட்டுத் திட்டங்களை அதிகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நெருக்கடியின் மோசமான தாக்கத்திலிருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது என்பதைக் குறிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில், சவூதி அரேபியா இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் பெட்ரோ கெமிக்கல்ஸ், சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் உற்பத்தி, விவசாயம் மற்றும் பல துறைகளில் முதலீடு செய்யப்போவதாக சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அறிவித்திருந்தார்.

"இந்தியாவில் முதலீடு செய்வதற்கான எங்கள் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளிலும் பல துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது குறித்து நாங்கள் விவாதித்து வருகிறோம்"  என்று சவூதி அரேபியாவின் தூதர் டாக்டர் சவுத் பின் முகமது அல் சதி தெரிவித்தார்.

சவூதி அரேபியா இந்தியாவை ஒரு மூலோபாய கூட்டாளியாகவும் நெருங்கிய நண்பராகவும் மதிப்பிடுகிறது என்று கூறிய அல் சதி, பயிற்சி, அறிவு பகிர்வு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொற்றுநோயின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தனது பொருளாதாரத்தை புதுப்பிக்க இந்தியாவின் நடவடிக்கைகளை அல் சதி பாராட்டியதுடன், இரு நாடுகளின் பொருளாதார மீட்சி பிராந்தியத்தில் உள்ள பிற பொருளாதாரங்களையும் உயர்த்த உதவும் என்றார். 

Similar News