கண் மூடினால் ஆட்டிப்படைக்கும் கனவு - திருடிய கோவில் சிலையை 6 நாளில் திருப்பி ஒப்படைத்த திருடர்கள்!
உத்திரபிரதேச மாநிலம் , சித்ரகூட் மாவட்டம், தருஹா கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோவிலில் திருடிச் சென்ற 16 விலைமதிப்பற்ற 14 சிலைகளை திருடர்கள் 6 நாட்களில் திருப்பி அளித்துள்ளனர். கோயில் சிலைகளை திருடிய பிறகு அச்சமூட்டும் கனவுகள் வந்ததால், அதற்கு பயந்து சிலைகளை ஒப்படைத்ததாக அந்தத் திருடா்கள் கடிதமும் எழுதி வைத்துள்ளனா்.
கார்வி கோட்வாலி இன்ஸ்பெக்டர் ராஜீவ் சிங் கூறுகையில் , "பாலாஜி கோவிலின் அர்ச்சகரான மஹந்த் ராம் பாலக் தாஸ் , 16 சிலைகள், ஐந்து கிலோ எடையுள்ள பாலாஜி சிலைகள், தாமிரத்தால் செய்யப்பட்ட 3 சிலைகள் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளார். திருடர்களுக்கு எதிராக IPC (திருட்டு) 380 பிரிவின் கீழ் நாங்கள் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம் என்றார்.
திருடுபோன 16 சிலைகளில் 14 சிலைகளை அந்தக் கோயில் அா்ச்சகரின் வீட்டுக்கு அருகே இரவு நேரத்தில் திருடா்கள் வைத்துவிட்டுச் சென்றனா். சிலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை மஹந்த் ராம் பாலக்கின் வீட்டிற்கு வெளியே மர்மமான முறையில் கிடந்த சாக்கு பையில் அடைக்கப்பட்டிருந்தன என்று கார்வி கோட்வாலி இன்ஸ்பெக்டர் ராஜீவ் சிங் தெரிவித்தார்.
அதே நேரத்தில் திருடர்களைக் கைது செய்ய இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. சிலைகளைத் திருடியவா்களை, கனவுகள் துரத்தியதால் மீண்டும் அதனை ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Inputs From: timesofindia