அறிவியல் தொழில்நுட்பத்தில் புதிய உயரத்தை அடைந்து வரும் இந்தியா: படைக்க இருக்கும் சாதனை!

அறிவியல், தொழில்நுட்பம், புதுமை சூழலியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்தியா இதில் புதிய உயரத்தை அடைந்து வரும் இந்தியா.

Update: 2023-03-10 01:19 GMT

திட்டம் உருவாகும் தருணத்திலிருந்தே புத்தொழில் நிறுவனங்களில் சம பங்குதாரராக செயல்படுவதற்கு தொழில்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக் கொண்டுள்ளார். புத்தொழில் நிறுவனங்களை வாழ்வாதாரத்துடன் இணைத்து நீண்ட காலத்திற்கு நிலை நிறுத்துவதற்கு மட்டுமல்லாமல், சமகால உலகளாவிய அளவுகோல்களுக்கு இணங்க இந்திய தொழில்துறைக்கு மதிப்பு கூட்டலை ஏற்படுத்தவும் இது அவசியமாகிறது என்று அவர் வலியுறுத்தினார்.


ஐதராபாத்தின் இந்திய ரசாயன தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ.ஐ.சி.டி) நடைபெற்ற தொழில்துறையினர், புத்தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான பிரத்தியேக அமர்வில் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலத்தின் வழக்கொழிந்த கட்டுப்பாடுகளை நீக்கி, புத்தொழில் நிறுவனங்களும், வர்த்தகங்களும் சுலபமாக பணிகளை மேற்கொள்ளும் சீர்திருத்தங்களை ஏற்படுத்தும் ஓர் அரசு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல தசாப்தங்களுக்குப் பிறகு உருவாகியிருப்பதாக பெருமிதத்துடன் கூறினார்.


நடைமுறை சிக்கல்களைக் களைவதற்காக உறுதியற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஆக்கபூர்வமான திட்டங்களை நிaர்ணயிக்குமாறு தொழில்துறை தலைவர்களுக்கு அவர் அறிவுறுத்தனார். மே 2014க்கு பிறகு Expecteda, தொழில்நுட்பம், புதுமை சூழலியலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதால் இந்தியா இதில் புதிய உயரத்தை அடைந்து வருவதாக டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு உலகளாவிய புத்தாக்க குறியீட்டில், 130 நாடுகளுள், 81-ஆம் இடத்தில் இருந்த இந்தியா, 2022-ஆம் ஆண்டு 40-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News