பிளாஸ்டிக் கழிவுகளை மடிக்க தேசிய கொடியை பயன்படுத்திய லியாகத் - குப்பை குடோனில் நடந்த அவமதிப்பு!

Update: 2022-05-21 11:44 GMT

சூரத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை மடிக்க தேசிய கொடியை பயன்படுத்தியதாக குப்பை வியாபாரி ஒருவரை வாபி போலீசார் கைது செய்தனர். மோரை கிராமத்தில் லியாகத் கான் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளியின் கடையில் இருந்து 30 தேசியக் கொடிகளை கைப்பற்றியதாக போலீசார் தெரிவித்தனர்.

கடைகளுக்கு குடிநீர் கேன்களை சப்ளை செய்யும் ரூபேஷ் நாயக் என்பவர், லியாகத்தின் கடையில் குப்பைகளை மடிக்க தேசிய கொடிகள் பயன்படுத்தப்பட்டதைக் கண்டறிந்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ரூபேஷ் கிராம சர்பஞ்ச் மற்றும் பிற கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார். பிளாஸ்டிக் கழிவுகளை மடிக்க பயன்படுத்திய 30 தேசிய கொடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாயக் அளித்த புகாரின் அடிப்படையில், லியாகத் கான் மீது தேசிய மரியாதையை அவமதிப்பதை தடுப்புச் சட்டம்பிரிவு 2ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லியாகத் கான், தேசியக் கொடியில் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சூரத்தில் உள்ள சந்தோஷ் ஒருவரிடம் இருந்து வாங்கியதாகவும், டெம்போ டிரைவரால் டெலிவரி செய்யப்பட்டதாகவும் கூறினார்.

சந்தோஷ் மற்றும் டெம்போ டிரைவரை கைது செய்ய சூரத்துக்கு தனிப்படைகளை அனுப்பியுள்ளோம்" என்று வாபி காவல் நிலைய ஆய்வாளர் பி.ஜே.சர்வையா தெரிவித்தார்.

Input From: Indian Express 

Similar News