கொரோனா வேகமாகப் பரவ வாய்ப்பு: நிதி ஆயோக் எச்சரிக்கை !

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை குறைந்து வருகிறது. நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

Update: 2021-10-18 07:38 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை குறைந்து வருகிறது. நோயிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 13,596- பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று தொற்றில் இருந்து 19,582 பேர் குணமடைந்துள்ளனர். இதில் 166 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இது பற்றி நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினரும், கொரோனா தடுப்புப் பிரிவின் தலைவருமான வி.கே.பால் கூறியதாவது: ஏற்கனவே கோவேக்சின் தடுப்பூசி பெரியவர்களுக்கு போடப்பட்டு வருகிறது. சிறார்களுக்கு செலுத்தப்பட வேண்டுமெனில் உற்பத்தியை விநியோகத்தையும் அதிகரிக்க வேண்டும். கொரோன வைரஸ் நோய்த்தொற்று வேகமாக சிறார்களை தாக்குகிறது. அதே சமயம் சிறார்களுக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்படுவதில்லை. அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்க எளிதாக நோய் பரவி விடுகிறது. தடுப்பூசியின் உற்பத்தியை பெருக்கிய பின்னர் சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.

மேலும், இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கல் ஓய்ந்துள்ளது. இதனால் கொரோனா அழிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பல அலைகளாகத் தொடர்ந்து தாக்கி வருவதை பார்த்து வருகிறோம். எனவே இந்தியா இக்கட்டான சூழலை கடந்து வருகிறது. வரபோகின்ற தீபாவளி பண்டிகை காலங்களில் மக்கள் அதிகளவு கூடுவார்கள் இதனால் தொற்றும் வேகமாக பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே எச்சரிக்கையுடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Daily Thanthi


Tags:    

Similar News