செல்பி ஆர்வம் : 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்தவர் என்ன ஆனார் தெரியுமா ?

Update: 2021-10-04 08:59 GMT

இந்த காலத்தில்  மொபைல் போனில் செல்பி எடுக்கும் ஆர்வம்  அனைவரையும் தொற்றிக்கொண்டுள்ளது, இதனால் பலரும் அந்த ஆர்வத்தில் தங்கள் உயிர்களையும் மாய்த்துக்கொண்டனர். ஆனால் கர்நாடகத்தில் ஒரு அதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்துள்ளது.

கர்நாடகாவின் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதி அருகே செல்பி மோகத்தால் 140 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கர்நாடக மாநிலம் கலாபுர்கி மாவட்டம் ஜேவர்கியைச் சேர்ந்த பிரதீப் சாகர், 30. இவர் நண்பர்களுடன், கர்நாடகாவின் கோகாக் நீர்வீழ்ச்சி குகைப் பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது செல்பி எடுக்க முயன்றவர், கால் தவறி 140 அடி பள்ளத்தில் விழுந்தார்.

சமூக ஆர்வலர் அயூப் கான் என்பவரது முயற்சியால், போலீசாரின் உதவியோடு 12 மணி நேரத்தில் பிரதீப் சாகர் மீட்கப்பட்டர். அவருக்கு அதிர்ஷ்டவசமாக லேசான காயங்கள் தான் ஏற்பட்டன. ஆனால், கீழே விழுந்ததில் அவருக்கு கடும் மன அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Dinamalar



Tags:    

Similar News