மூத்த குடிமகனைத் தாக்கிய சிவசேனா கும்பல்! இணையத்தில் வலம்வரும் வீடியோ!

மூத்த குடிமகனைத் தாக்கிய சிவசேனா கும்பல்! இணையத்தில் வலம்வரும் வீடியோ!

Update: 2021-02-07 12:55 GMT

ஒரு கொடூரமாக மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவமாக, வயதான மூத்த நபர் ஒருவரை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்ததாகக் கூறி சிவசேனா கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோவும் பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவானது சிவசேனா கட்சியின் சமூக ஊடகங்களைக் கையாளுபவரான பிரசாந்த் ஜஃதப் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த வீடியோவில், அந்த கும்பல் பாதிக்கப்பட்டவரைச் சுற்றிவளைத்து முகத்தில் மையைத் தெளித்து இழிவு படுத்தினர். பாதிக்கப்பட்டவர் பந்தர் பூரை சேர்ந்த RSS ஸ்வயம்சேக்கை சேர்ந்த ஷிரிஷ் கடேகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 
 

மேலும் அந்த குண்டர்கள் அவரை சுற்றிவளைத்து ஒன்றாகக் கூடி முழக்கமிட்டது மட்டுமல்லாமல், அவரை வளையல் மற்றும் சேலை அணியச் செய்து இழிவுபடுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தடுக்க காவல்துறை இருந்த போதிலும் சிவசேனா கும்பல் தாக்குதலை நிறுத்தவில்லை. இந்த தாக்குதலானது மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்ததைத் தொடர்ந்து நடந்துள்ளதாக சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மூத்த குடிமகனை "பா.ஜ.க வின் பிம்ப்" என்று கூறியதோடு சிவசேனாவின் இந்த இழிவான செயலுக்குப் பாராட்டையும் பிரசாந்த் ஜஃதப் தெரிவித்தார். இதனோடு விடாமல் பாதிக்கப்பட்டவருக்கு 15 முதல் 20 எழுப்புகள் உடைந்திருக்கும் என்று கேலி செய்தார். மேலும் அவர் ஆறு மாதங்களுக்கு மேலாக ICU வில் அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் விமர்சித்துள்ளார். 

இதுபோன்று சம்பவம் நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியக் கடற்படை வீரரை ஒருவரையும் சிவசேனா கும்பல் தாக்கியுள்ளது. இதுபோன்று செயலுக்கு மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பாட்னவிஸ் கண்டனத்தைத் தெரிவித்ததோடு குற்றவாளிகளை விரைவில் தண்டிக்க வேண்டும் என்றும் கூறினார். 

Similar News