'என் கனவில் சிவன் வந்தார்' - சிவ பக்தியுடன் யாத்திரைக்கு கிளம்பிய இஸ்லாமிய இளைஞர்

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த ஃபைஸ் முகமது என்ற முஸ்லிம் இளைஞர் தனது கனவில் சிவ பெருமான் தோன்றியதாகக் கூறியுள்ளார்.

Update: 2022-07-26 07:42 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த ஃபைஸ் முகமது என்ற முஸ்லிம் இளைஞர் தனது கனவில் சிவ பெருமான் தோன்றியதாகக் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் கன்வார் யாத்திரைக்கு செல்கிறார். அவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கனவில் சிவனை கண்டதாகவும் அன்றிலிருந்து சிவபெருமானின் தீவிர பக்தர் ஆகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஐந்து ஆண்டுகளாக ஃபைஸ் முகமது கன்வார் யாத்திரையில் பங்கேற்று வருகிறார். அவர் தனது பெயரை சங்கர் என்ற ஃபைஸ் முகமது என்றும் எழுத ஆரம்பித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள காத்லி கிராமத்தில் வசித்து வருபவர் ஃபைஸ் முகமது. அங்குள்ள ஒரு நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது கனவில் சிவபெருமானின் தரிசனம் பெற்றதாகவும், இந்த சம்பவத்திற்குப் பிறகு சிவபெருமானின் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டதாகவும் ஃபைஸ் முகமது கூறுகிறார்.

கடவுள் நம்பிக்கைக்கு ஜாதி மதம் எல்லைகள் கிடையாது என்று ஃபைஸ் முகமது கூறினார்‌. தனக்கு சிவன் மீது அபரிமிதமான நம்பிக்கை இருப்பதாகவும், இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு பாக்பத்தில் மகாதேவருக்கு ஜல அபிஷேகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். ஜூலை 22, 2022 வெள்ளிக்கிழமை அன்று, கத்தௌலியின் கங்கா நகர் பத்ரிக்கு அருகில் உள்ள திரிவேணி சர்க்கரை ஆலையில் உள்ள கன்வார் சேவா முகாமை ஃபைஸ் முகமது அடைந்தார். இந்த சிவபக்தரை முகாமில் உள்ள மக்கள் மிகுந்த அன்புடனும் பாசத்துடனும் வரவேற்றனர்.

இதுவரை ஐந்து முறை கன்வார் யாத்திரை சென்றுள்ளேன் என்ற ஃபைஸ் முகமது மேலும் கூறுகையில், முன்பு அவர் மட்டுமே யாத்திரை சென்று வந்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு முதல் விஸ்வம்பர் என்ற மற்றொரு கிராமத்து வாசியும்

தன்னுடன் இணைவதாக கூறியுள்ளார். அவர்கள் ஹரித்வாரில் இருந்து கங்கை நதியின் புனித நீரை கொண்டு வந்து மீரட்டின் காளி பால்டன் பகுதியில் உள்ள ஆகாத்நாத் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு சமர்ப்பிப்பார்கள்.

சிலர் தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக மதங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தி வெறுப்பை பரப்புகின்றனர் என்று ஃபைஸ் முகமது கூறினார். அந்த மக்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தனது நம்பிக்கையை தொடர்ந்து கடைப்பிடிப்பேன் என்றும் ஃபைஸ் முகமது கூறினார்.


Source - Opindia.com

Similar News