ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்! காசி விஸ்வநாதரா? - உடனடியாக சீல் வைக்கப்பட்ட மசூதி

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-05-16 13:30 GMT

ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதால் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியை சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உத்திரபிரதேசம் மாநகராட்சி வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் சுவரிலுள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையில் ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை தாக்கல் செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி ஞானவாபி மசூதி வளாகத்தில் இன்று மூன்றாம் நாள் வீடியோ ஆய்வு பணி நடைபெற்றது ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 65% ஆய்வு நிறைவடைந்த நிலையில் இன்று கடைசி கட்ட வீடியோ பதிவுடன் கூடிய ஆய்வு துவங்கியது.


ஆய்வு முற்றிலும் நிறைவடைந்த நிலையில் ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது ஆகவே சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த பகுதிக்குள் யாரும் நுழைய கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Source - Daily Thanthi

Similar News