வாரணாசி ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது விவாதப் பொருளாக மாறி உள்ளது. சிலர் அதனை சிவலிங்கம் என்று நினைக்கிறார்கள், மற்றவர்கள் அதை ஒரு நீரூற்று என்று கூறுகின்றனர். IIT-BHUவல்லுநர்கள் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கவனமாக ஆய்வு செய்து, சாத்தியக்கூறுகளை பற்றி விளக்கியுள்ளனர்.
பேராசிரியர் ஆர்.எஸ்.சிங் கூறுகையில், "இது ஒரு சிவலிங்கம் என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன், ஆனால் சிலர் அதை நீரூற்று என்று கூறுகின்றனர், ஏனெனில் அதன் நுனியில் நீரூற்று போன்ற அமைப்பு உள்ளது.
அதன் மேல் பகுதி வெண்மையானது, மீதமுள்ள சிவலிங்கம் கருப்பு நிறமானது. நீரூற்று போல தோற்றமளிக்க யாரோ அதன் மேல் எதையோ வைத்ததாகத் தெரிகிறது.
நீரூற்று என்று நாம் கருதினால், பல ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லை, மக்கள் அதிக உயரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றினர், அந்த பகுதி வேறு வடிவத்தில் மாறி இருக்கும். ஆனால் ஞானவாபி வளாகத்தில் இதுபோன்ற அமைப்பு இல்லை என்று பேராசிரியர் தெரிவித்தார். மின்சாரம் இல்லாமல் இயங்குவதற்கு 50 முதல் 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீரை ஊற்றக்கூடிய தொழில்நுட்பம் இருக்க வேண்டும்.
சிவலிங்கத்தின் மீது யாரோ வெள்ளை சிமெண்ட் போட்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது," என்று அவர் கூறினார். இது ஒரு நீரூற்றாக இருக்க வேண்டும் என்றால், அதில் ஒரு துளை இருக்க வேண்டும், அங்கு குழாய் நுழையும் வசதி இருக்க வேண்டும், ஆனால் அந்த வகையான எதையும் பார்க்க என்றார்.
"மேலும், இந்த விட்டம் கொண்ட நீரூற்று அமைப்பது கடினம்," என்று அவர் கூறினார். "இந்த புகைப்படத்தில், கீழ் பகுதி சிவலிங்கத்தின் வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் மேல் பகுதி முற்றிலும் வேறுபட்டது" என்று சிங் கூறினார்.
Inputs From: India Today