இந்திய மாணவர்களுக்காக எளிய விசா கொள்கை-பிரெஞ்சு தூதர் தகவல்!

பிரான்சுக்கு கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களை ஈர்க்கும் விதமாக எளிய விசா கொள்கை உருவாக்கப்பட்டு வருவதாக பிரெஞ்சு தூதர் தியரி மாத்தூ கூறினார்.

Update: 2023-11-14 10:00 GMT

இந்தியாவுக்கான பிரெஞ்சு தூதர் தியரி மாத்தூ இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக புதுச்சேரி வந்தார். அவர் புதுவையில் உள்ள பிரெஞ்சு நிறுவனங்களை பார்வையிட்டு நிர்வாகிகளுடன்  ஆலோசனை நடத்தினார். இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது . கல்வி , மாணவர் பரிமாற்ற திட்டங்களால் இருநாட்டு இளைஞர்களின் திறன் மேம்படும். மேலும் இரு நாட்டு மக்களின் உறவுகளையும் மேம்படுத்தும்.


வருகிற 2025 - ஆம் ஆண்டுக்குள் 20 ஆயிரம் இந்திய மாணவர்களை பிரான்சுக்கு கல்வி கற்க வரவழைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 2030 ஆம் ஆண்டுக்குள் 30 ஆயிரமாக உயர்த்தவும் பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல்  மேக்ரான் இலக்கு நிர்ணயித்துள்ளார். கல்விக்காக வரும் மாணவர்களுக்கு விசா வழங்கும் முறைகளை எளிதாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக இந்திய மாணவர்களை ஈர்க்கும் விதமாக எளிய விசா கொள்கையை உருவாக்கும் பணியில் பிரான்ஸ் அரசு தீவிரமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :DAILY THANTHI

Similar News