பாகிஸ்தான், சீனாவுக்கும் ஒரே நேரத்தில் அட்டாக்.. வலிமையுடன் தயாராகும் இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான், சீனாவுக்கும் ஒரே நேரத்தில் அட்டாக்.. வலிமையுடன் தயாராகும் இந்திய ராணுவம்.!

Update: 2020-12-11 18:41 GMT

எல்லையில், சீனாவும், பாகிஸ்தானும் ஒரே சமயத்தில் அத்துமீறினால் இரண்டு நாடுகளையும், சமாளித்து கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில், இரட்டை படையணி அமைப்பை ஏற்படுத்துவதில் இந்திய ராணுவம் மிக தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில், கடந்த மார்ச் மாதம் முதல், சீனா அத்துமீறுவதால், பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து இந்திய ராணுவமும் நவீன ஆயுதங்களோடு, தனது துருப்புகளை குவித்துள்ளது. இதே போன்று எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு வகைகளில் அத்துமீறுவதும், தமது மண்ணில் இருந்து பயங்கரவாதிகளை ஏவி விடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

சீனா ஒருபுறம், பாகிஸ்தான் மறுபுறமும் எல்லைகளில் அத்துமீறுவதோடு, நாட்டில் ஸ்திரத்தன்மையற்ற சூழலை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து தோற்றுதான் போகிறது. எனவே, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட, இந்திய ராணுவம் திடமான ஒரு முடிவை எடுத்துள்ளது.

சீனா அத்துமீறும்போதும், அங்கு முழு கவனத்தை திருப்புவதோடு, ஏராளமான படையணிகளை லடாக் எல்லையை ஒட்டிய பகுதிகளில் நகர்த்த வேண்டிய பொறுப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அத்துமீறினால், அதை சமாளித்து முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு இருந்தாலும், படையணிகளை நகர்த்துவதற்கு சற்று தாமதமாக நேரிடும் வாய்ப்பும் உண்டு.

ஒரே நேரத்தில் சீனா மற்றும் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு முடிவு கட்டும் வகையிலும், இரட்டை போர் யுத்த படையணி அமைப்பை உருவாக்குவது குறித்து, இந்திய ராணுவம் தீவிரம் காட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 

Similar News