தடுப்பூசி போடப்பட்டது தவறாக பதிவாகி இருந்தாலும், இனி கவலைப்படத்தேவையில்லை - மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

Six members can be registered using one mobile number on Co-WIN

Update: 2022-01-23 01:00 GMT

நாடு முழுவதும் பல பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி போட கோவின் என்ற டிஜிட்டல் தளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. தடுப்பூசி முறைகளை ஒழுங்குமுறைப்படுத்த, மத்திய அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோவின் இணையளம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கீழ்கண்ட அம்சங்கள் கோவின் இணையளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

கோவின் இணையளத்தில் ஒரே போன் எண்ணில் 4 பேர் பதிவு செய்யலாம் என்ற முறை அமலில் இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஒரு போன் எண்ணில் 6 பேர் பதிவு செய்ய முடியும்.

தடுப்பூசி நிலவரத்தை ரத்து செய்தல் - கோவின் இணையளத்தில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருவரின் தடுப்பூசி நிலவரம் தவறாக பதிவு செய்யப்பட்டிருந்தால், அதை ரத்து செய்ய முடியும். இரண்டு தவனை தடுப்பூசி நிலையிலிருந்து, ஒரு தவணையாகவும், அல்லது தடுப்பூசி செலுப்படவில்லை என மாற்றிக் கொள்ள முடியும்.

தவறான பதிவின் காரணமாக ஒரு சிலருக்கு தடுப்பூசி சான்றிதழ்களும் உருவாக்கப்பட்டிருந்தாலும், தடுப்பூசி நிலவரத்தை பயனாளியால் சரிசெய்து கொள்ள முடியும். இந்த மாற்றத்துக்கு ஆன்லைன் மூலம் வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும். 3 முதல் 7 நாட்களில், மாற்றங்கள் செய்யப்படும். அதன்பின் இந்த பயனாளிகள் தங்களின் தடுப்பூசிகளை அருகில் மையங்களில் செலுத்திக் கொள்ள முடியும். இதற்கு தேவையான விதிமுறைகள் கோவின் இணையளத்தில் விரைவில் சேர்க்கப்படும்.




Tags:    

Similar News