இந்த ஆண்டு முடியும் முன்னர் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு.. அமைச்சர் திட்டவட்டம்.!

இந்த ஆண்டு முடியும் முன்னர் விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு.. அமைச்சர் திட்டவட்டம்.!

Update: 2020-12-18 19:42 GMT

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை பஞ்சாப், அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 3 வாரங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுடன் விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர், உணவுத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தகத்துறை அமைச்சர் சோம் பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட மத்திய அரசு குழு அமைத்து 5 சுற்று பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் முடிவு எட்டப்படாமல், முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த தருணத்தில் விவசாய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில்: நாங்கள் தொடர்ந்து விவசாயிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே எங்களின் நோக்கம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். விவசாயிகள் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வை நோக்கி நகர முடியும் என்று நான் நம்புகிறேன். மேலும், இந்த ஆண்டு முடிவதற்குள் விவசாயிகள் பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்பட்டுவிடும். எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.

Similar News