ஊருக்கு மட்டும் உபதேசமா.. சோனியா, ராகுல் தடுப்பூசி போட்டார்களா? மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கேள்வி.!

காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2021-06-11 10:50 GMT

காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.




 


இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தடுப்பூசி போடும் பணியானது தொடங்கியது. அப்போது தடுப்பூசிகள் குறித்து காங்கிரஸ் கட்சியினர் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் தற்போது அவர்களே தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.




 


இதனிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா? அவர்கள் தடுப்பூசி போடாதது ஏன்? எனக்கு தெரிந்தவரை அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

இந்தியாவில் தயாரான தடுப்பூசிகள் மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. தடுப்பூசி குறித்து மக்களிடம் குழப்பத்தை உண்டாக்கி எதிர்க்கட்சிகள் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கின்றனர். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Similar News