தேர்தல் கொண்டாட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பிய SPDI கட்சியினர்!

தேர்தல் கொண்டாட்டத்தில் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பிய SPDI கட்சியினர்!

Update: 2020-12-31 12:46 GMT

இந்தியச் சமூக ஜனநாயக கட்சியினர் எப்பொழுதும் தங்கள் செயல்களில் தேசத்திற்கு எதிரான செயல்களிலே ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை அன்று கர்நாடக தட்சினா கன்னடா மாவட்டத்தில் உஜிரே பகுதியில் பஞ்சாயத்துத் தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் மையத்துக்கு வெளியே இந்தியச் சமூக ஜனநாயக கட்சி(SPDI) தொண்டர்கள் கொடிகளை ஏந்தி "பாகிஸ்தான் ஜிந்தாபாத்" என்ற கோஷங்களை முழங்கினர். அவர்கள் மேல் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. அதில் இஸ்லாமிய அமைப்பான SPDI உறுப்பினர்கள் அவர்களின் கொடிகளை ஏந்தி 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற முழக்கங்களைக் கூறுவதைக் காண முடிந்தது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்த முழக்கங்கள் பெல்தாங்கடி பகுதியில் உள்ள முண்டாஜே கிராம பஞ்சாயத்துக்கு வெளியே கூறப்பட்டது. 

இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து SPDI கட்சி உறுப்பினர்கள் மீது புதன்கிழமை தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தக்ஷிணா கன்னடா காவல் ஆய்வாளர் BM லட்சுமி பிரசாத், பதிவு செய்யப்பட்ட வீடியோவை காவல்துறை ஆராய்ந்து 15 SPDI தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். அவர்கள் மீது இந்தியத் தண்டனை சட்டம் 124(A) மற்றும் 143 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையில், பெல்தங்கடியின் SPDI  தலைவர் ஹைர் அலி, கட்சியின் ஆதரவாளர்கள் கட்சிக்கு ஆதரவாக வேட்பாளர்கள் வெற்றிக்காகவே முழக்கங்களை எழுப்பினர். இந்த சம்பவத்துக்கான வீடியோ ஆதாரங்கள் இருந்த போதிலும் அவர், அவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' முழக்கங்கள் எழுப்பவில்லை 'SPDI ஜிந்தாபாத்' என்றே கூறினர் என்றார். 

Similar News