புதிய ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம்.. ரூ. 40,700 கோடி கடன் ஒப்புதல்.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமை!

பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்துவதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் முக்கிய மைல்கல்லாக திகழ்கிறது.

Update: 2023-04-06 00:45 GMT

ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொழில்முனைவோர் அவர்களுடைய தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துகிறது. பொருளாதார ரீதியில் அதிகாரமளித்தல் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதை கவனத்தில் கொண்டு தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஏப்ரல் 5, 2016 அன்று தொடங்கப்பட்டது. ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிர் தொழில்முனைவோர் சந்திக்கும் பல்வேறு சவால்களை கருத்தில் கொண்டு அவர்களுடைய கனவுகளை நனவாக்கும் வகையில் உற்பத்தி, சேவைகள் அல்லது வர்த்தகத் துறைகள் மற்றும் வேளாண் சார்ந்த நடவடிக்கைகளில் ஊக்குவிக்கும் வகையில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது.


அப்போது நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 1.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மகளிர் மற்றும் ஷெட்யூல்டு, பழங்குடியின தொழில் முனைவோருக்கு ரூ.40,600 கோடிக்கும் அதிகமாக கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எனக்கு பெருமையும், திருப்தியும் அளிக்கிறது என்று கூறினார்.


ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தின் 7-ம் ஆண்டு நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், ஷெட்யூல்டு, பழங்குடியினர் மற்றும் மகளிரிடையே தொழில் முனைவோரை ஊக்குவிப்பதில் ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என்பதை நிரூபித்துள்ளதாக தெரிவித்தார். ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம், சேவை கிடைக்கப்பெறாத, பின்தங்கிய தொழில்முனைவோருக்கு உகந்தவகையில், கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் பல்வேறு தரப்பினரை சென்றடைந்துள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News