ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம்: மத்திய அரசின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது!
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தில் தேசிய ஸ்டார்ட் அப் மாநாட்டிற்கு 30 நிறுவனங்களை தேர்வு செய்ய திட்டம்.
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. எலக்ட்ரானிக்ஸ் மட்டும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலும், இந்திய சாப்ட்வேர் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைப்பும் இணைந்து கடந்த பதினேழாம் தேதி சென்னை தரமணி இல் ஸ்டார்ட் அப் இந்தியா மாநில மாநாட்டை நடத்தின. இதில் பங்கிற்கு 75 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.
அதில் 30 நிறுவனங்களை நடுவர் குழு இறுதியாக தேர்வு செய்தது. அதில் இருந்து அடுத்த நடக்க உள்ள ஸ்டார்ட் அப் மான் தேசிய மாநாட்டுக்கு 5 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன. மாநாட்டில் புதுமையான யோசனைகளை தெரிவிக்கும் 30 நிறுவனங்களை அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவை சேர்ந்த உயிர்மட்டு குழு தேர்வு செய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த நிகழ்ச்சியின் காரணமாக, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த நாம் தற்பொழுது ஏற்றுமதி செய்வதற்கும் தயாராகி விட்டோம். அந்த அளவிற்கு தற்போது தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்து பரவலாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Input & Image courtesy: News