சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா! மேற்குவங்கத்திற்கு பிரதமர் பயணம்!

சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா! மேற்குவங்கத்திற்கு பிரதமர் பயணம்!

Update: 2021-01-22 08:02 GMT

இந்திய சுதந்திரத்திற்காக மிகவும் பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாள் விழா வரும் 23ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு வருடமும் ‘பரக்ரம் திவாஸ்’ எனும் வலிமை தினமாக கொண்டாடுவதற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனையொட்டி நாடு முழுவதும் போஸ் பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வருகின்ற 23ம் தேதி (சனிக்கிழமை) பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார்.

கொல்கத்தாவில் நடைபெறுகின்ற போஸ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொள்கிறார். அவர் தோற்றுவித்த ராணுவத்தை கவுரவிக்கும் விதமாக முக்கிய ராணுவ வீரர்களை சந்தித்து பிதரமர் பரிசு வழங்க உள்ளார்.

இந்திய ராணுவத்தை போற்றும் வகையில் சுமார் 26 ஆயிரம் தியாகிகளின் நினைவாக நினைவிடம் அமைக்க ஆலோசனை நடத்தப்படுகிறது. முதலாவதாக கொண்டாடப்படும் வலிமை தினம் மிக சிறப்பாக நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார். இதற்காக 85 பேர் கொண்ட உயர்மட்ட குழு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News