8 வழிச்சாலை திட்டம் தடை தொடரும்.. வழிமுறைகளை வெளியிட்டு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

8 வழிச்சாலை திட்டம் தடை தொடரும்.. வழிமுறைகளை வெளியிட்டு உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு.!

Update: 2020-12-08 11:40 GMT

சேலம், சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்த திட்டத்திற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தை அனுகினர்.

இதனையடுத்து உயர்நீதிமன்றமும் நிலம் கையகப்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிடு செய்தது. இதற்கு நில உரிமையாளர்களும் கேவியட் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியானது.

இந்நிலையில், சேலம், சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விதித்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில், புதிய அறிவிக்கையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்த மேல்முறையீட்டு வழக்குக்கு உச்சநீதிமன்ற நீதபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், சேலம், சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த விதித்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் புதிய அறிவிக்கையை வெளியிட்டு 8 வழிச்சாலை திட்டத்தை தொடரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Similar News