குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசின் பதில் இதுதான்!

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகு தான் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது மத்திய அரசின் பதில்.

Update: 2022-11-02 02:56 GMT

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காங்கிரஸ், தி.மு.க தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மக்கள் நீதி மையம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 232 ரிட்டன் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அணுக்கள் தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசிற்கு 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உத்தரவிட்டது. உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம் இதை எடுத்து மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 1,217 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருக்கும் அம்சங்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தம் குடிமக்களுக்கு ஏற்கனவே உள்ள உரிமைகளை பாதிக்கவில்லை.


குடியேற்ற கொள்கை குடியுரிமை குடியேற்ற விளக்கு போன்றவை நாடாளுமன்ற அதிகார வரம்பிற்குள் வருவதால், அவை தொடர்பாக பொதுநல வழக்குகள் பொதுநலக்களுக்கு கேள்விக்கு உட்படுத்தப்பட முடியாது. பொருளாதாரக் கொள்கை, குடியுரிமை போன்ற விவகாரங்கள் தொடர்பான சட்டங்கள் இயற்ற பரப்பு எல்லையை நாடாளுமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. அனைத்தும்சங்களையும் ஆராய்ந்த பிறகு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமை நீதிபதி தலைமையிலான இந்த ரிட்டன் மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது.


மத்திய அரசின் சார்பில் இந்த விவகார தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க சார்பில் மூத்த வக்கீல் இது பற்றி வாதாடுகையில், இந்த விவகாரத்தை அசாம், திரிபுர மாநிலங்களுக்கு மட்டும் சுருக்க முடியாது. 1983 ஆம் ஆண்டு தொடங்கி அகதிகளாக தமிழகத்தில் வசித்து வரும் இலங்கை தமிழர்களும் இந்த விவகாரத்தில் தொடர் படுகிறது. அசாம், திரிபுரா தொடர்பாக மட்டுமே மத்திய அரசு பதில் மனு அனுப்பியுள்ளது. ஆனால் இலங்கை தமிழர்கள் தொடர்பாக மத்திய அரசின் மனுவில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று கேட்டு இருக்கிறார். மேலும் இந்த மனுக்கள் தொடர்பான மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News